Posts

Showing posts from December, 2023

இந்தியன் வங்கியும் விடுதலைப் போரும் பாகம்-2:

Image
  அர்புத்னாட் சந்து: அர்புத்னாட் & கோ வேகமா வளருது. எவ்ளோ வளர்ச்சி ன்னா, தென்னிந்திய வர்த்தகத்தை தீர்மானிக்கற முப்பெரும் நிறுவனங்களில் ஒன்னு ங்கற அளவுக்கு. (Arbuthnot & Co, Binny & Co, Parry & Co) அர்புத்னாட் குடும்பத்து உறுப்பினர்களுக்கள்ளாகவே தலைமை பொறுப்பு மாறி மாறி போகுது (Tata Sons ல இருக்கிற மாதிரி). George Gough Arbuthnot ங்கறவர் 1871ல பங்குதாரராகவும், பின்னாடி மூத்த பங்குதாரராகவும் ஆகறார். இவர் ஆறு தடவை Madras Legislative Councilஇல் உறுப்பினராக இருந்தவர். இவர் எடுத்த முடிவு நிறுவனத்தை அழிவுப்பாதையில் தள்ளுது. Patric McFayden ன்னு ஒருத்தர் லண்டனில் Patric McFayden & Co ங்கற பேரில், Arbuthnot & Coஇன் கிளையைத் தொடங்குறார். இந்த கிளை நிறுவனம் பல தோல்வி திட்டங்களில் முதலீடு பண்ணுது. நீலகிரியில் தங்கக்கிணறு தோண்டும் திட்டம், அமெரிக்காவில்இருப்புப் பாதைகள் அமைக்கும் திட்டம் - இப்படி. 1906 அக்டோபர் மாசம் Patric Mc Fayden லண்டனில் ரயிலில் பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கிறார். அர்புத்னாட் & கோ திவாலாகுது. வழக்கு நீதிமன்றத்துக்கு வருது. காரசாரமான வாத பிரதிவாதங்கள...

இந்தியன் வங்கியும் விடுதலைப் போரும் பாகம்-1:

Image
டிமான்ட்டியின் கதை: ஃப்ரெஞ்ச் வணிகரான (Francis La Tour) 1777ல La Tour & Co. ங்கற வணிக வங்கியை (Mercantile bank) சென்னைல தொடங்கறார். 1800ல இந்தியாவுக்கு வர்ற, ஸ்காட்லாண்ட்க்காரரான Arbuthnot 1803ல வங்கியோட பங்குதாரர் ஆகுறார். வங்கியோட பேர் La Tour, Arbuthnot & Co. ன்னு மாறுது. 1765ல பிறந்த போர்த்துகீசிய வணிகரான டிமான்ட்டி (Yes, நம்ம De Monte தான்) சென்னைக்கு வந்து இதே வங்கில 1808 ஆம் வருஷத்துல இன்னொரு பங்குதாரர் ஆகுறார். 1810ல La Tour இந்த வங்கிலேர்ந்து விலகறார். Arbuthnot, Demonte & Co. ன்னு பேர் மாறுது வங்கி. முதல்ல டிமான்ட்டி மனைவி மேரிக்கு மனநலம் பாதிக்கப்படுது. மனைவி வழிபட 1808ல கோவளத்துல ஒரு சர்ச் கட்டறார். (இன்னும் இருக்கு - Our Lady of Mount Carmel.) 1816ல ஜெர்மனில படிப்ப முடிச்ச டிமான்ட்டியோட மகன் க்றிஸ்டோஃபர், வங்கில பொறுப்பேத்துக்க கப்பல்ல கிளம்பி வரான். கப்பல் ல்ல ஒத்தைக்கு ஒத்த கத்திச்சண்டைல (Duel) செத்துப்போறான். 1821ல டிமான்ட்டியும் செத்துப்போறார். கொஞ்ச நாள் கழிச்சு தான் மேரி இறந்துப் போறாங்க. (படத்துல காட்டறது கற்பனை. உண்மைக்கதை இல்லை.) இப்போ அர்புத்னாட், டிம...

சென்னையும் இங்கிலாந்தும்-பாகம்-2:

Image
வெள்ளஸ்லி - பென்டிங்க் - எலிஸபெத்: ரிச்சர்ட் வெள்ளஸ்லி, ஒரே சமயத்துல மதராஸ் கவர்னர் மற்றும் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலா இருக்கார். இந்தியா வரதுக்கு முன்னாடி ஹையஸிந்த் (Hyacinth) ன்னு ஒரு ஃப்ரெஞ்ச் நடிகையோடு வாழ்ந்து, பின்னாடி மணக்கறார். இவங்களுக்கு ஏன்னி (Anne) ன்னு ஒரு மகள். ஏன்னி, சார்ல்ஸ் கேவன்டிஷ் பென்ட்டிங்க் (Charles Cavendish Bentinck) (இவர் நம்ம வில்லியம் பென்ட்டிங்க் உடைய தம்பி)ன்னு ஒருத்தரை மணக்கறார். இவங்களுக்கு சார்லஸ் வில்லியம் ன்னு ஒரு பையன். இவர் பாதிரி ஆகறார். பாதிரியோட மகளான செஸிலியா (Cecilia)க்கு க்ளாமிஸ்(Lord Glamis) கூட கல்யாணம் நடக்குது. இவங்க கொழந்த தான் எலிஸபெத். எலிஸபெத் ஆறாம் ஜார்ஜ்(George VI/Albert)ஐ கல்யாணம் பண்ணிகிட்டதால இங்கிலாந்து ராணி ஆகறாங்க. #england #queen #elizabeth #localhistorymatters #trivia #historybuff #madras #tntrivia #cne

சென்னையும் இங்கிலாந்தும்-பாகம்-1:

Image
வெள்ளஸ்லி இல்லம், சென்னை: அண்ணன் பேர் ரிச்சர்ட் வெள்ளஸ்லி, தம்பி பேர் ஆர்தர் வெள்ளஸ்லி. அண்ணன் ரிச்சர்ட் ஒரே சமயத்துல மதராஸ் கவர்னர் மற்றும் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலா இருக்கார். தம்பி ஆர்தர் பிரிட்டிஷ் மிலிட்டரில வேல செய்றார். அப்போ ஒரு தகவல். திப்பு சுல்தான் நெப்போலியன் கிட்ட பிரிட்டிஷ் அரசை எதிர்க்க உதவி கேக்றார் ன்னு. இதைக் காரணமா வச்சு 1798-ல நாலாவது ஆங்கில-மைசூர் போர் தொடங்குது. போர் தொடங்கறப்போ, ரெண்டு வெள்ளஸ்லிக்களும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைல சார்லஸ் வீதில இருக்க வெள்ளஸ்லி இல்லத்துல (Wellesley House) தங்கி இருக்காங்க. ஆர்தர் இந்தப்‌ போர்ல ஒரு கர்னலா கலந்துக்குறார். பெருவெற்றி! அப்றம் 1802-ல மேஜர் ஜெனரலா ரெண்டாவது ஆங்கில-மராத்தா போர், திரும்பவும் வெற்றி! மென்மேலும் வெற்றிகள் வர, 1815-ல வாட்டர்லூ போர்ல ஃபீல்டு மார்ஷலா இருந்து, நெப்போலியனையே தோக்கடிக்கறார். அப்றம் 1828-ல இருந்து 1834 வரை ஐக்கிய பேரரசோட (UK) பிரதமரா இருக்கார், ஆர்தர். #chennai #localhistorymatters #trivia #historybuff #madras #tntrivia #cne