இந்தியன் வங்கியும் விடுதலைப் போரும் பாகம்-1:


டிமான்ட்டியின் கதை:
ஃப்ரெஞ்ச் வணிகரான (Francis La Tour) 1777ல La Tour & Co. ங்கற வணிக வங்கியை (Mercantile bank) சென்னைல தொடங்கறார்.
1800ல இந்தியாவுக்கு வர்ற, ஸ்காட்லாண்ட்க்காரரான Arbuthnot 1803ல வங்கியோட பங்குதாரர் ஆகுறார்.
வங்கியோட பேர் La Tour, Arbuthnot & Co. ன்னு மாறுது.
1765ல பிறந்த போர்த்துகீசிய வணிகரான டிமான்ட்டி (Yes, நம்ம De Monte தான்) சென்னைக்கு வந்து இதே வங்கில 1808 ஆம் வருஷத்துல இன்னொரு பங்குதாரர் ஆகுறார்.
1810ல La Tour இந்த வங்கிலேர்ந்து விலகறார்.
Arbuthnot, Demonte & Co. ன்னு பேர் மாறுது வங்கி.
முதல்ல டிமான்ட்டி மனைவி மேரிக்கு மனநலம் பாதிக்கப்படுது. மனைவி வழிபட 1808ல கோவளத்துல ஒரு சர்ச் கட்டறார். (இன்னும் இருக்கு - Our Lady of Mount Carmel.)
1816ல ஜெர்மனில படிப்ப முடிச்ச டிமான்ட்டியோட மகன் க்றிஸ்டோஃபர், வங்கில பொறுப்பேத்துக்க கப்பல்ல கிளம்பி வரான். கப்பல் ல்ல ஒத்தைக்கு ஒத்த கத்திச்சண்டைல (Duel) செத்துப்போறான்.
1821ல டிமான்ட்டியும் செத்துப்போறார். கொஞ்ச நாள் கழிச்சு தான் மேரி இறந்துப் போறாங்க.
(படத்துல காட்டறது கற்பனை. உண்மைக்கதை இல்லை.)
இப்போ அர்புத்னாட், டிமான்ட்டி & கோ வெறும் அர்புத்னாட் & கோ ன்னு பேர் மாறுது.
#demonte #demontecolony #chennai #indianbank #localhistory #kovalam #madrasmemories #madras #tntrivia #madrasandme

Comments