சென்னையும் இங்கிலாந்தும்-பாகம்-2:

வெள்ளஸ்லி - பென்டிங்க் - எலிஸபெத்:

ரிச்சர்ட் வெள்ளஸ்லி, ஒரே சமயத்துல மதராஸ் கவர்னர் மற்றும் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலா இருக்கார்.
இந்தியா வரதுக்கு முன்னாடி ஹையஸிந்த் (Hyacinth) ன்னு ஒரு ஃப்ரெஞ்ச் நடிகையோடு வாழ்ந்து, பின்னாடி மணக்கறார். இவங்களுக்கு ஏன்னி (Anne) ன்னு ஒரு மகள்.
ஏன்னி, சார்ல்ஸ் கேவன்டிஷ் பென்ட்டிங்க் (Charles Cavendish Bentinck) (இவர் நம்ம வில்லியம் பென்ட்டிங்க் உடைய தம்பி)ன்னு ஒருத்தரை மணக்கறார். இவங்களுக்கு சார்லஸ் வில்லியம் ன்னு ஒரு பையன். இவர் பாதிரி ஆகறார்.
பாதிரியோட மகளான செஸிலியா (Cecilia)க்கு க்ளாமிஸ்(Lord Glamis) கூட கல்யாணம் நடக்குது.
இவங்க கொழந்த தான் எலிஸபெத். எலிஸபெத் ஆறாம் ஜார்ஜ்(George VI/Albert)ஐ கல்யாணம் பண்ணிகிட்டதால இங்கிலாந்து ராணி ஆகறாங்க.

Comments