சென்னையும் இங்கிலாந்தும்-பாகம்-1:
வெள்ளஸ்லி இல்லம், சென்னை:
அண்ணன் பேர் ரிச்சர்ட் வெள்ளஸ்லி, தம்பி பேர் ஆர்தர் வெள்ளஸ்லி.
தம்பி ஆர்தர் பிரிட்டிஷ் மிலிட்டரில வேல செய்றார்.
அப்போ ஒரு தகவல்.
திப்பு சுல்தான் நெப்போலியன் கிட்ட பிரிட்டிஷ் அரசை எதிர்க்க உதவி கேக்றார் ன்னு.
இதைக் காரணமா வச்சு 1798-ல நாலாவது ஆங்கில-மைசூர் போர் தொடங்குது.
போர் தொடங்கறப்போ, ரெண்டு வெள்ளஸ்லிக்களும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைல சார்லஸ் வீதில இருக்க வெள்ளஸ்லி இல்லத்துல (Wellesley House) தங்கி இருக்காங்க.
ஆர்தர் இந்தப் போர்ல ஒரு கர்னலா கலந்துக்குறார். பெருவெற்றி!
அப்றம் 1802-ல மேஜர் ஜெனரலா ரெண்டாவது ஆங்கில-மராத்தா போர், திரும்பவும் வெற்றி!
மென்மேலும் வெற்றிகள் வர, 1815-ல வாட்டர்லூ போர்ல ஃபீல்டு மார்ஷலா இருந்து, நெப்போலியனையே தோக்கடிக்கறார்.
அப்றம் 1828-ல இருந்து 1834 வரை ஐக்கிய பேரரசோட (UK) பிரதமரா இருக்கார், ஆர்தர்.


Comments
Post a Comment