இந்தியன் வங்கியும் விடுதலைப் போரும் பாகம்-2:

 அர்புத்னாட் சந்து:

அர்புத்னாட் & கோ வேகமா வளருது.

எவ்ளோ வளர்ச்சி ன்னா, தென்னிந்திய வர்த்தகத்தை தீர்மானிக்கற முப்பெரும் நிறுவனங்களில் ஒன்னு ங்கற அளவுக்கு. (Arbuthnot & Co, Binny & Co, Parry & Co)
அர்புத்னாட் குடும்பத்து உறுப்பினர்களுக்கள்ளாகவே தலைமை பொறுப்பு மாறி மாறி போகுது (Tata Sons ல இருக்கிற மாதிரி).
George Gough Arbuthnot ங்கறவர் 1871ல பங்குதாரராகவும், பின்னாடி மூத்த பங்குதாரராகவும் ஆகறார். இவர் ஆறு தடவை Madras Legislative Councilஇல் உறுப்பினராக இருந்தவர்.
இவர் எடுத்த முடிவு நிறுவனத்தை அழிவுப்பாதையில் தள்ளுது.
Patric McFayden ன்னு ஒருத்தர் லண்டனில் Patric McFayden & Co ங்கற பேரில், Arbuthnot & Coஇன் கிளையைத் தொடங்குறார்.
இந்த கிளை நிறுவனம் பல தோல்வி திட்டங்களில் முதலீடு பண்ணுது.
நீலகிரியில் தங்கக்கிணறு தோண்டும் திட்டம், அமெரிக்காவில்இருப்புப் பாதைகள் அமைக்கும் திட்டம் - இப்படி.
1906 அக்டோபர் மாசம் Patric Mc Fayden லண்டனில் ரயிலில் பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கிறார்.
அர்புத்னாட் & கோ திவாலாகுது.
வழக்கு நீதிமன்றத்துக்கு வருது.
காரசாரமான வாத பிரதிவாதங்களுக்கு அப்புறம் George Gough Arbuthnot க்கு 18 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுது.
இதுக்கு இடையில் 1905ல தொடங்கிய சுதேசி இயக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுது.
அதனால வெளிநாட்டு வங்கிகளை நம்புவதை விட, இந்தியர்களே இந்தியர்களுக்காக ஒரு வங்கி தொடங்கினா பரவாயில்லை ங்கற கருத்தாக்கம் வளருது.
அதுக்கு முன்னாடி வரை இந்தியாவில் இருந்த வங்கிகள் எல்லாமே வெளிநாட்டு வங்கிகள் தான்.
அதனால George Gough Arbuthnotக்கு எதிரா வழக்கை வாதாடி ஜெயிச்ச கிருஷ்ணசாமி அய்யரும் ராமசாமி செட்டியாரும் சேந்து சென்னையில் மார்ச் 5, 1907ல ஒரு வங்கி ஆரம்பிக்கறாங்க.
முதன்முதலாக இந்தியர்களுக்காக இந்தியர்களால் தொடங்கப்பட்ட அந்த வங்கிதான் Indian Bank
சென்னையில் பீச் ஸ்டேஷன் எதிரில் இருந்த Arbuthnot & Co இன் அலுவலகத்தை 1909ல வாங்கி அதே இடத்துக்கு இந்தியன் வங்கியின் தலைமையிடத்தை மாத்துறாங்க.
இந்தியன் வங்கி அமைஞ்சிருக்கற அந்த சந்தோட பேர் Arbuthnot Lane தான், இன்னைக்கும்!


ராமசாமி செட்டியாருடைய தம்பி அண்ணாமலை செட்டியார் இந்தியன் வங்கியின் Board of Directorsல ஒருத்தரா 1915ல நியமிக்கப்படறார்.
இந்த அண்ணாமலை செட்டியார் தான் 1929ல அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தொடங்குறார்.

#annamalai #annamalaiuniversity #indianbank #chennaitriva #chennai #madrastrivia #tntrivia #arbuthnot #bankhistory #economichistory

Comments